Homeசமூகம்துன் டாய்மின் குடும்பத்தினர் மீது 8 புதிய சொத்துகள் மீதான குற்றச்சாட்டுகள்!

துன் டாய்மின் குடும்பத்தினர் மீது 8 புதிய சொத்துகள் மீதான குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர்,மே 22- கடந்தாண்டு நவம்பர் 13ஆம் தேதி காலமான துன் டாய்ம் ஸைனுடினின் குடும்பத்தினர் மீது வருமான வரி வாரியத்திடம் முழுமையான சொத்து விவரங்களைக் காட்டத் தவறிய 8 புதிய வழக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தாக்கல் செய்யவிருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

துன் டாய்ம் மரணமடைந்த பின்னர் அவர் மீதான சொத்து சம்பந்தமான வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டன. இருப்பினும், புதிய ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளதால், 8 குற்றச்சாட்டுகள் விரைவில் சுமத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமக்குச் சொந்தமான 38 நிறுவனங்கள், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங், கெடா மற்றும் கோலாலம்பூரில் உள்ள 19 துண்டு நிலங்கள், மற்றும் விலைமிகுந்த சொத்துகள், அமானா சாஹாம் நேஷனல் மற்றும் அமானா சாஹாம் நேஷனல் நிதி போன்றவற்றில் பங்கு இருப்பு முதலியவற்றை டாய்ம் அறிவிக்கத் தவறியதாக அவர் மீது இதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டது.

அவரின் மனைவி நைமா காலிட்டும் பல நிறுவனங்கள், பல இடங்களில் உள்ள துண்டு நிலங்கள், விலையுயர்ந்த வாகனங்கள் முதலியவற்றை அறிவிக்காத காரணத்தினால் அவர் மீது எம்ஏசிசி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

spot_img

latest articles

explore more