Homeஅரசியல்பொய்யான வாக்குறுதியை அளிக்காதீர்! தேசிய முன்னணிக்கு  மசீச, மஇகா வேண்டுகோள்

பொய்யான வாக்குறுதியை அளிக்காதீர்! தேசிய முன்னணிக்கு  மசீச, மஇகா வேண்டுகோள்

கோலாலம்பூர், மே 25-ஒரு காலத்தில் தேசிய முன்னணிக்கு பங்காளிக் கட்சிகளாகவும் முதுகெலும்பாகவும் திகழ்ந்து வந்த மலேசிய சீனர் சமூகமும் மலேசிய இந்தியர் காங்கிரஸும் நெடுங்காலமாக உறுப்பியம் பெற்றுள்ளன.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பிகேஆரின் மடானி அமைச்சரவையில் மசீசவுக்கும் மஇகாவிற்கும் எந்தவொரு அமைச்சர் பதவியும் தரப்படாது ஏமாற்றப்பட்டுள்ளன.

வாக்குறுதி அளித்தது போன்று அம்னோவின் தலைவர் ஸாஹிட் ஹமிடி நடந்து கொள்ளத் தவறியதால் அவ்விரு கட்சிகளுக்கு தேசிய முன்னணி தொடர்ந்து அங்கம் வகிப்பது பற்றி மறு பரிசீலனை செய்யவிருப்பதாக எச்சரித்துள்ளன.

எனவே, 16ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னரும் தாங்கள் அமைச்சரவையில் இருந்து ஒதுக்கப்படாமலிருக்க தங்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட வேண்டுமென அவ்விரு கட்சிகளும் நெருக்குதல் கொடுத்து வருகின்றன.

 

spot_img

latest articles

explore more