கோலாலம்பூர், மே 26-தற்போது தலைநகரில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி வியட்நாமிலிருந்து புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை மலேசியாவும் சிங்கப்பூரும் பெறும் வகையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் அந்தப் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியின் ஒரு பகுதி மலேசியாவிற்கும் இன்னொரு பகுதி சிங்கப்பூருக்கும் விநியோகிக்கப்படும்.
இந்திட்டத்தில் பெட்ரோனாஸ் நிறுவனம் முன்னின்று ஏற்பாடு செய்திருப்பதாக அதன் செயல் முறை அதிகாரி தெங்கு டான்ஸ்ரீ முகமட் தவ்ஃபிக் தெரிவித்தார்.
இது ஆசியானின் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் என்றும் அதன் முழு அம்சங்கள் யாவும் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் விவரித்தர்.


