Homeசமூகம்மியன்மாரின் ராணுவ அட்டூழியத்தை ஆசியான் தடுக்க வேண்டும்! சார்லஸ் சந்தியாகோ

மியன்மாரின் ராணுவ அட்டூழியத்தை ஆசியான் தடுக்க வேண்டும்! சார்லஸ் சந்தியாகோ

கிள்ளான், மே 28-அண்மைய காலமாக மியன்மார் ராணுவம் தனது எதிர்ப்பாளர்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு இன அழிப்பு நடவடிக்கையை நடத்தி வருகிறது.

அதன் நடவடிக்கைக்கு ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் ராணுவ, நிதியளிப்புகளைச் செய்து வருவதால் மியன்மார் ராணுவத்தின் அராஜகம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

எனவே, ஆசியான் இதனை சாதாரண சண்டை என்று எடுத்துக் கொள்ளாமல் நேரடியாக மேற்கண்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த இன அழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தினால் மட்டுமே அந்தக் கூட்டமைப்பின் நோக்கம் நிறைவேறும் என்று கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

 

spot_img

latest articles

explore more