கோலாலம்பூர், ஜூன் 3-
முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு ஸப்ருல் அப்துல் அசிஸின் விலகலுக்குப் பிறகு, உட்கட்சி பூசல் தீவிரமடையும் தன்மையிலான எந்தவொரு பதற்றமான சூழலும் அம்னோவில் நிலவவில்லை.
கட்சிச் சார்ந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும், ஸப்ருல் விலகியது நல்லதே என்றே கடைநிலை உறுப்பினர்கள் அனைவரும் கருதுவதாக, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமீடி கூறினார்.
கட்சிக்கு விசுவாசம் அல்லாதவர்கள், அம்னோவிலிருந்து வெளியேறுவது ஏற்புடையது என கூறிய அவர், தற்போது ஹஜ் புனித யாத்திரைக்குச் சென்றுள்ள ஸப்ருலை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகும் கடிதத்தை அம்னோவுக்கு அனுப்பியிருந்ததாக கூறிய ஸப்ருல், பி.கே.ஆரில் இணையும் விருப்பத்தை முன்வைத்திருந்தார்.


