Homeகுற்றவியல்மோட்டார் சைக்கிளில் நாயை இழுத்துச் செல்வதா? முதியவர் கைது

மோட்டார் சைக்கிளில் நாயை இழுத்துச் செல்வதா? முதியவர் கைது

சுங்கைப்பட்டாணி, ஜூன் 17-

நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் இங்குள்ள பண்டார் புத்ரி ஜெயாவில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிளின் பின் புறம் நாயைக் கட்டி இழுத்துச் செல்லும் காணொளி வைரலானது.

இதனையடுத்து, விசாரணைக்கு உதவும் வகையில் 82 வயதான முதியவர் கைது செய்யப்பட்டதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் சிவப்பு நிற ஹோண்டா மோட்டார் சைக்கிள், சாவி மற்றும் சாலை வரி மற்றும் ஒரு வெள்ளை ஹெல்மெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாக அறியப்படுகிறது.

கைது செய்யப்பட்ட முதியவர் மீது இதற்கு முன்பு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்று ஹன்யான் குறிப்பிட்டார்.

அந்த முதியவர் சுய நினைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் எனினும் தனது செல்லப் பிராணியை மோட்டார் சைக்கிளின் பின் புறம் கட்டி இழுத்துச் சென்றதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் ஹன்யான் சொன்னார்.

இச்சம்பவம் மீது விசாரணை தொடர்வதாக அவர் மேலும் கூறினார்.

 

 

 

spot_img

latest articles

explore more