Homeமலேசியாஇறக்குமதி பழங்களுக்கான எஸ்எஸ்டி மறுஆய்வு! -துணைப் பிரதமர்

இறக்குமதி பழங்களுக்கான எஸ்எஸ்டி மறுஆய்வு! -துணைப் பிரதமர்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19- இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி ) விகிதம் விரைவில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

மாண்டரின் ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற சில பழ வகைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றின் விற்பனை மற்றும் சேவை வரி மீது மறுபரிசீலனை செய்யும்படி இத்துறை சார்ந்தவர்கள் விடுத்து வரும் கோரிக்கைகளை அரசாங்கம் கருத்தில் கொள்வதாக அகமது ஜாஹிட் ஹமிடி மேலும் சொன்னார்.

இந்நிலையில் பழங்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீதான வரி விகிதங்களை மறு ஆய்வு செய்வது குறித்து நிதி அமைச்சும் பொருளாதார அமைச்சும் கருத்தில் கொண்டுள்ளதாக சமூக மேம்பாட்டுத் துறையின் (கெமாஸ்) ஆசிரியர் தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் துணைப்பிரதமர் பேசினார்.

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு எஸ்எஸ்டி விதிக்கும் அரசின் நடவடிக்கை குறித்து மைடின் பேரங்காடி நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் முகமது முன்னதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

மாண்டரின், ஆரஞ்சு முதலிய பழங்களைக் குறைந்த வருமானம் பெறுபவர்களும் வாங்குவதை அவர் சுட்டிக் காட்டினார்.

 

spot_img

latest articles

explore more