Homeஉலகம்இஸ்ரேய்லின் அராஜகம்: வன்மையாகச் சாடினார் பிரதமர்

இஸ்ரேய்லின் அராஜகம்: வன்மையாகச் சாடினார் பிரதமர்

புத்ரா ஜெயா, ஜூன் 19-

ஈரான் மீது இஸ்ரேய்ல் தாக்குதல் நடத்துவது அராஜகம் மற்றும் கொடுங்கோண்மை நடவடிக்கை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடுமையாகச் சாடினார்.

அது சட்டத்திற்குப் புறம்பான தாக்குதல் என்றும் மத்திய கிழக்கின் அமைதிக்கு அது ஊறு விளைவித்து அப்பாவி மக்களைக் கொல்வது கொடுமையிலும் கொடுமை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சட்டத்தையும் மனித உயிர்களையும் மதிக்கும் நாடுகள் இஸ்ரேய்லின் இந்த அடாத செயலைக் கண்டித்து போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று அன்வார் வலியுறுத்தினார்.

 

 

spot_img

latest articles

explore more