Homeகுற்றவியல்அந்நியத் தொழிலாளியைக் காயப்படுத்தினார்: பணியாளரை நீக்கியது செல்லும்

அந்நியத் தொழிலாளியைக் காயப்படுத்தினார்: பணியாளரை நீக்கியது செல்லும்

கோலாலம்பூர், ஜூன் 25-

2019 செப்டம்பர் 8ஆம் தேதி பகாவ், பத்தாங் ஜெலாய் தோட்டத்தில் இந்திரன் என்ற கணக்குப்பிள்ளை தமது நான்கு நண்பர்களோடு சேர்ந்து அங்கு வேலை செய்த சிராஜுடின் ஷா என்ற இந்தியப் பிரஜையைத் தாக்கி கடும் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அது தொழிலியல் கட்டுப்பாட்டிற்கு  விரோதம் என்று கூறிய தோட்ட நிர்வாகம், கட்டொழுங்கு நடவடிக்கையில் இந்திரனையும் அவரது 4 நண்பர்களையும் வேலையிலிருந்து நீக்கியது.

இந்திரன் அதற்கு எதிராக தொழிலியல் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தார்.

அதனை விசாரித்த தொழிலியல் நீதிமன்றம் இந்திரன் மற்றும் அவரது நண்பர்களை வேலையிலிருந்து நீக்கியது சட்டத்திற்கு உட்பட்டதே என்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பை முன்னிட்டு நிர்வாகத்தின் நடவடிக்கை செல்லும் என்றும், இந்திரனையும் அவரது நண்பர்களையும் வேலையிலிருந்து நீக்கியதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியதோடு இந்திரனின் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

(பொன் முனியாண்டி)

 

spot_img

latest articles

explore more