Homeசமூகம்'MyGov Malaysia' செயலி அடுத்த மாதம் அறிமுகம்!கோபிந்த்  சிங்

‘MyGov Malaysia’ செயலி அடுத்த மாதம் அறிமுகம்!கோபிந்த்  சிங்

கோலாலம்பூர், ஜூன் 25-

‘MyGov Malaysia’ செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த்  சிங் டியோ தெரிவித்தார்.

இந்தச் செயலி வாயிலாக பொது மக்கள் அரசாங்கத்தின் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறலாம்  என்றார்.

மலேசியாவை ஓர் இலக்கவியல் நாடாக மாற்றும் அரசாங்கத்தின் இலட்சிய  திட்டத்தின் ஒரு பகுதியே இந்தச் செயலியின் அறிமுகம் என்று  கோபிந்த்  சிங்   அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டார்.

‘MyGov Malaysia’ செயலி முதற்கட்டமாக ஏழு முக்கியமான சேவைகளை மையமாகக் கொண்டிருக்கும்.

கடப்பிதழ், பிறப்பு மற்றும் குடியுரிமை, சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமம், சுகாதார பராமரிப்பு, சம்மன்கள், வீட்டுவசதி, ரஹ்மா நிதியுதவி ஆகியவையே அவை.

இவற்றிற்கான விண்ணப்பங்களை  மக்கள் இந்தச் செயலியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.

இந்தச் செயலியில் எதிர்காலத்தில் மேலும் பல புதிய அம்சங்கள் மற்றும்  சேவைகள் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும்  அமைச்சர் சொன்னார்.

‘MyGov Malaysia’ செயலி, ‘MyDigital ID’ உடன் ஒருங்கிணைக்கப்படும் என்பதால்  பொதுமக்கள்  தங்களின்  ‘MyDigital ID’ சான்றுகளைப் பயன்படுத்தி  தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றார் கோவிந்த் சிங்.

spot_img

latest articles

explore more