Homeசமூகம்சமூகம்இலக்கவியல் தொழில்நுட்பம்: அதிகமான அடித்தட்டு மக்கள் பயனடைய வேண்டும் - கோபிந்த் சிங் 

இலக்கவியல் தொழில்நுட்பம்: அதிகமான அடித்தட்டு மக்கள் பயனடைய வேண்டும் – கோபிந்த் சிங் 

இலக்கவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்து நிலை மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கும் அடித்தட்டு மக்களுக்கும் பயன் தரக்கூடியதாக இருப்பது அவசியம் என இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.

சிரமப்படுவோர் , பேரிடர்களினால் நெருக்கடிகளை எதிர்நோக்குவோர் ஆகியோருக்கு உதவுவது மட்டுமின்றி  அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவும் இது  உதவ வேண்டும்.

சிஐஎம்பி வங்கி நிறுவனம், டிஎன்ஜி டிஜிட்டல்   நிறுவனத்தோடு கைக்கோர்த்து மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டம் மக்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியாக, இந்தத் திட்டம் மாபெரும் மாற்றங்களை உருவாக்கியிருப்பது  புலப்படுகிறது என்றார் கோபிந்த் சிங்.

கல்வி, பொருளாதார மேம்பாடு, இளைஞர்களுக்கான விளையாட்டுத்துறை என 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம் இலக்கவியல் தொழில்நுட்பத்தின் வழி விரிவாக்கம் கண்டு வருவது பெருமை அளிக்கிறது  என்றார் அமைச்சர்.

அதோடு, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இது போன்ற திட்டங்கள் எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றார்.

வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல்-இலக்கவியல் தொழில்நுட்ப உலகில் மலேசியர்களும் பங்குகொண்டு முன்னேற இலக்கவியல் தொழில்நுட்ப அறிவு அத்தியாவசியமானது. ஆகையால், மலேசியர்கள் இலக்கவியல் தொழில்நுட்ப அறிவை கொண்டிருப்பது அவசியம் என்று  அமைச்சர்  வலியுறுத்தினார்.

இலக்கவியல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் திட்டங்களை இலக்கவியல் அமைச்சு செயல்படுத்திவருகிறது.

அமைச்சின் பல்வேறு முயற்சிகளில் ‘ஜெலாஜா டிஜிட்டல் மடானி’ எனப்படும் இலக்கவியல் தொடர் பயணம் மற்றும் மக்களுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்பயிற்சி திட்டங்களும் அடங்கும் என்றார்.

 

spot_img

latest articles

explore more