கோலாலம்பூர், ஜூலை 7-
இந்தியாவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஐஐடியின் கிளை வளாகத்தை மலேசியாவில் நிறுவ இந்தியப் பிரதமர் மோடி கொள்கை அளவில் ஒப்புக் கொண்டிருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பிரேசில், ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் கூட்டணியின் மாநாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அன்வார், மோடியுடன் அது பற்றிய பேச்சு வார்த்தையை நடத்தியபோது அந்த வாய்மொழியிலான உடன்பாடு எட்டி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் நிலை தொழில்துறைப் பல்கலைக்கழகமான ஐஐடி விளங்குவதாகவும் இந்தியாவுடன் வர்த்தகம், முதலீடு, இலக்கவியல் தொழில் நுட்பம் மற்றும் பல்வேறு துறைகளில் இருவழி வாய்ப்புகளைப் பெற விரும்புவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
-பொன் முனியாண்டி


