Homeசமூகம்கோல்பீல்ஸ் எஸ்டேட் ஆலயக் குடமுழுக்கு: 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

கோல்பீல்ஸ் எஸ்டேட் ஆலயக் குடமுழுக்கு: 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

சுங்கை பூலோ:

கோல்பீல்ஸ் எஸ்டேட்டில் அமைந்துள்ள 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் – ஸ்ரீ கரிலமலயான் சிவனேஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று கோலாகலமாக டைபெற்றது.

பல ஆண்டுகளாக ஆலயத்தின் மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்படாமல் இருந்த நிலையில், மலேசிய மக்கள் சக்தி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் அவர்களின் ஆதரவுடன் ஆலயத்தின் மறுகட்டுமான மற்றும் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் ஆலயம் புதிய பொலிவுடன் மீண்டும் எழுந்துள்ளது.

இன்று நடைபெற்ற குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் மற்றும் சிவபெருமானின் அருளைப் பெற்றனர்.

காலை முதலே நடைபெற்ற யாகங்கள், வேத மந்திரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் விழாவிற்கு ஆன்மீக சிறப்பைச் சேர்த்தன.

பொது மக்கள் ஆலயத்திற்கு தொடர்ந்து வருவதை வழக்கமாக்கி, ஆன்மீக உணர்வையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more