கோலாலம்பூர், ஜூலை 22 –
மலேசிய இந்திய முஸ்லீம்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்தை வழங்கும் விவகாரத்தை அணுக்கமாக ஆராய சிறப்பு செயற்குழுவை அரசாங்கம் அமைக்க வேண்டும் என பெர்காசா வலியுறுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் அரசியலமைப்பு, சட்டம், வரலாறு, உணர்வுப்பூர்வ அம்சங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு துல்லியமாக ஆராயப்பட வேண்டும் என அதன் தலைவர் டத்தோ டாக்டர் இப்ராஹிம் அலி தெரிவித்தார்.
மலேசியாவில் பிறந்த இந்திய முஸ்லீம்களுக்கு பூமிபுத்ரா அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனும் அச்சமூகத்தின் கோரிக்கையை பரிசீலிக்க அரசாங்கம் தயார் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்தது தொடர்பில் அவர் இவ்வாறு கூறினார்.


