சென்னை, ஜூலை.24 –
தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி 2 ( விஐபி 2 ) படத்திற்கு அனிருத்தை விட்டுவிட்டு ஷான் ரோல்டனை ஒப்பந்தம் செய்தது ஏன் என்று அந்த படத்தின் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
விஐபி படத்திற்கு இசையமைத்த அனிருத் விஐபி 2 படத்தில் இல்லை. விஐபி 2 படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். விஐபி 2 படத்தில் அனிருத் இல்லாதது அவரது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து விஐபி 2 இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது, ” அனிருத்தை ஓரங்கட்டவில்லை. அனி ஒரு திறமையான இசையமைப்பாளர். அவரை நினைத்து எங்கள் குடும்பமே பெருமைப்படுகிறது. விஐபி 2 படத்திற்கு ஷான் தான் சரி என்று நானும், தனுஷ் சாரும் நினைத்தோம்.”
ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தாலும் விஐபி படத்தின் முதல் பாகத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது பாகத்திற்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


