Homeவிளையாட்டுஸ்பெயின் லா லீகா - ரியல் மெட்ரிட்டைக் காப்பாற்றினார் பேல் !

ஸ்பெயின் லா லீகா – ரியல் மெட்ரிட்டைக் காப்பாற்றினார் பேல் !

பார்சிலோனா, ஜன. 8 –

ஸ்பெயின் லா லீகா பட்டத்தை தற்காக்கும் முயற்சியில் ரியல் மெட்ரிட் மேலும் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 2 – 2 என்ற கோல்களில் செல்தா வீகோவுடன் சமநிலைக் கண்டது.

 இந்த சமநிலை முடிவால், ரியல் மெட்ரிட் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவைக் காட்டிலும் 16 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது. 33 ஆவது நிமிடத்தில் டானியல் வாஸ் போட்ட கோலின் மூலம் செல்தா வீகோ 1 – 0 என்ற கோல்களில் முன்னணிக்கு சென்றது.

அதனைத் தொடர்ந்து அதிரடி தாக்குதல்களை வெளிப்படுத்திய ரியல் மெட்ரிட், கேரத் பேல் மூலம் இரண்டு கோல்களைப் போட்டு முன்னணிக்கு சென்றது.எனினும் 82 ஆவது நிமிடத்தில் மக்சி கோமேஸ் போட்ட கோல், ரியல் மெட்ரிட்டின் வெற்றி கனவை சிதைத்தது.

இந்த சமநிலை முடிவை அடுத்து ரியல் மெட்ரிட் 32 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.ரியல் மெட்ரிட்டைக் காட்டிலும் ஓர் ஆட்டம் கூடுதலாக விளையாடியுள்ள பார்சிலோனா 48 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

spot_img

latest articles

explore more