Homeவிளையாட்டுஇங்கிலாந்து எப்.ஏ கிண்ணம் - அர்செனல் அதிர்ச்சி தோல்வி !

இங்கிலாந்து எப்.ஏ கிண்ணம் – அர்செனல் அதிர்ச்சி தோல்வி !

லண்டன், ஜன. 8 –

இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான அர்செனல் 2 – 4 என்ற கோல்களில் நோட்டிங்ஹம் போரேஸ்டிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 முறை எப்.ஏ கிண்ணத்தை வென்ற அர்செனல், நோட்டிங்ஹம் போரேஸ்டிடம் எளிதில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.

எனினும் சொந்த அரங்கில் களமிறங்கிய நோட்டிங்ஹம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் செல்சியுடன் சமநிலைக் கண்ட அர்செனல் அணியில் நிர்வாகி ஆர்சன் வெங்கர் 9 மாற்றங்களை செய்திருந்தார்.எனினும் இந்த மாற்றம் அர்செனலுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பாதி ஆட்டத்தில் எரிக் லிச்சாஜ், நோட்டிங்ஹம் அணியின் முதல் கோலைப் போட்டார்.எனினும் மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் பெர் மெர்டேசாக்கர் போட்ட கோலின் மூலம் அர்செனல் ஆட்டத்தை சமப்படுத்தியது. முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் மீண்டும் லிச்சாஜ் போட்ட கோலின் வழி நோட்டிங்ஹம் போரேஸ்ட், 2 – 1 என்ற கோல்களில் முன்னணிக்கு சென்றது.

64 ஆவது நிமிடத்தில் பினால்டியின் மூலம் நோட்டிங்ஹம் போரேஸ்ட் மூன்றாவது கோலைப் போட்டது. 80 ஆவது நிமிடத்தில் டேனி வெல்பெக் அர்செனலின் இரண்டாவது கோலைப் போட்டிருந்தாலும் கியேரன் டாவெல் போட்ட மற்றொரு பினால்டி கோல் அர்செனலின் கனவை சிதைத்தது.

spot_img

latest articles

explore more