Homeவிளையாட்டுவெஸ்ட் ஹேம் யுனைடெட்டில் இணைந்தார் ஹெர்னான்டேஸ்

வெஸ்ட் ஹேம் யுனைடெட்டில் இணைந்தார் ஹெர்னான்டேஸ்

லண்டன், ஜூலை.25 –

மெக்சிக்கோவின் தாக்குதல் ஆட்டக்காரர் ஹாவியர் ஹெர்னான்டேஸ், இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப்பான வெஸ்ட்ஹேம் யுனைடெட் அணியில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். 29 வயதுடைய ஹெர்னான்டேசை வாங்குவதற்கு வெஸ்ட் ஹேம் யுனைடெட் 1 கோடியே 60 லட்சம் பவுண்ட் தொகையை ஜெர்மனியின் பாயேர்ன் லெவர்கூசன் அணிக்கு வழங்கியுள்ளது.

வெஸ்ட்ஹேம் யுனைடெட் கிளப்புடன் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் ஹெர்னான்டேஸ் கையெழுத்திட்டுள்ளார். ஹாவியர் ஹெர்னான்டேஸ் கடந்த 2010 ஆம் ஆண்டுத் தொடங்கி 2014 ஆம் ஆண்டு வரை இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இடம்பெற்றிருந்தார்.

மென்செஸ்டர் யுனைடெட் கிளப்புடன் இரண்டு பிரீமியர் லீக் பட்டங்களை வென்றுள்ள ஹெர்னான்டேஸ்,. ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் அணியிலும் தற்காலிக ஒப்பந்தத்தில் விளையாடியுள்ளார். மெக்சிக்கோ தேசிய கால்பந்து அணியில் களமிறங்கிய 96 ஆட்டங்களில் ஹெர்னான்டேஸ் 48 கோல்களைப் போட்டிருக்கிறார்.

மெக்சிக்கோவுக்கு அதிக கோல்கள் அடித்த ஆட்டக்காரராகவும் ஹெர்னான்டேஸ் விளங்குகிறார். ஜெர்மனி பண்டேஸ்லீகா கால்பந்துப் போட்டியில் பாயேர்ன் லெவர்கூசன் அணியுடன் விளையாடிய 54 ஆட்டங்களில் 28 கோல்களைப் போட்டிருக்கிறார்.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் புதிய பருவத்தை முன்னிட்டு வெஸ்ட் ஹேம் யுனைடெட், பப்லோ சபாலேத்தா, ஜோ ஹார்ட், மார்கோ அர்னாதோவிச் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளது.

spot_img

latest articles

explore more