பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29-
பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு மலேசிய கிரேப் நிறுவனம் 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
அவற்றில் அவசர விசை (emergency button), மின் டாக்சி சேவைகளுக்கான வீடியோ கேமரா பதிப்பு (car video recorder), இணையத்தின் வழி நீண்ட தூர தொலைபேசி இணைப்பு (telematics program) ஆகியவை அடங்கும் என அதன் தலைவர் சீன் கோ தெரிவித்தார்.
இதில் அவசர சூழ்நிலை ஏதும் ஏற்பட்டால் அவசர அழைப்புச் சேவையில் பயணிகளை இணைக்க மெர்ஸ் 999 (MERS 999) என்ற சேவையை கிரேப் மலேசியா அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த அவசர அழைப்பு விசை வாயிலாக வெளியே செல்லும் அனைத்து பயணிகள், போலீஸ்காரர்கள் அழைப்புகளையும் (outgoing calls) கிரேப் பதிவுச் செய்யும். இந்த செயலியை விவேக அவசர விசையாக மட்டுமின்றி முழுமையாகவும் செயல்திறன் மிக்கதாகவும் மேம்படுத்த இந்நிறுவனம் கடப்பாடாகக் கொண்டிருப்பதாக சீன் கோ கூறினார்.


