Homeவிளையாட்டுஇங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் 100 ஆவது கோலை அடித்தார் லுக்காகூ!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் 100 ஆவது கோலை அடித்தார் லுக்காகூ!

மென்செஸ்டர், ஏப்.1 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட்டின் ரொமெலு லுக்காகூ தனது 100 ஆவது கோலைப் போட்டுள்ளார். சனிக்கிழமை நடந்த பிரீமியர் லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2- 0 என்ற கோல்களில் சுவான்சி சிட்டியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டின் முதல் கோலை ரொமெலு லுக்காகூ போட்டார். செல்சி. வெஸ்ட் புரோம்விச் அல்பியோன், எவெர்டன் அணிகள் விளையாடியுள்ள லுக்காக்கூவுக்கு பிரீமியர் லீக் போட்டியில் இது 100 ஆவது கோலாகும். அதேவேளையில் பிரீமியர் லீக் போட்டியின் வரலாற்றில் 100 கோல்களைப் போட்ட ஆட்டக்காரர்களின் பட்டியலில் 28 ஆவது ஆட்டக்காரராக லுக்காகூ இணைந்து கொண்டார்.

சுவான்சி சிட்டிக்கு எதிராக மென்செஸ்டர் யுனைடெட்டின் இரண்டாவது கோலை அலெக்சிஸ் சன்சேஸ் போட்டார். ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள மென்செஸ்டர் டார்பி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட், மென்செஸ்டர் சிட்டியை சந்திக்கவுள்ளது.

spot_img

latest articles

explore more