கோலாலம்பூர், ஜூலை 31-
ஜாலான் ராஜா லாவுட்டிலிருந்து ஜாலான் சுல்தான் இஸ்மாயில் வரை சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 500 பேரிடம் சோதனையிடப்பட்டது.
சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட அச்சோதனையில் முக்கிய சாலைகள் சிலவற்றை போலீஸ் தடுத்து வைத்திருந்ததால் இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அனைவரும் எங்கும் செல்ல வழியில்லாமல் ஒரே இடத்தில் சூழ்ந்துக் கொண்டனர்.
இந்த தடுப்பு நடவடிக்கையில் மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றாக சோதனையிட்டு அனுப்பப்பட்டதால் 3 கி.மீட்டர் தூரத்திற்கு சாலை நெரிசல் ஏற்பட்டதாக கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் தலைவர், ஏசிபி முகமட் நட்ஸ்ரி ஹுசேன் தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக 391 குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டன. அந்த எண்ணிக்கையில் சாலை வரி காலாவதி (66), வாகன உரிமம் இல்லாதது (58), உரிமம் காலாவதி (42), விதிமுறைப்படி இல்லாதப் பதிவு எண்ி பதிவு எண் (76), பதிவு எண் இல்லாமை (55), பக்க கண்ணாடியின்மை (26), ‘P ஸ்டிக்கரை ஒட்டாமை (44), ‘L ஸ்டிக்கரை ஒட்டாமை (24) ஆகியவை அடங்கும்.
இந்த சோதணையில் செந்தூல் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஓர் ஆடவனும் கைது செய்யப்பட்டதாக செய்தியாளர்களிடம் முகமட் நட்ஸ்ரி ஹுசேன் குறிப்பிட்டார்.


