Homeகலை உலகம்மலேசியா வருகிறார் இசைஞானி!

மலேசியா வருகிறார் இசைஞானி!

கோலாலம்பூர், ஜூலை 31

உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை புரிகின்றார். மலேசிய நேரப்படி மதியம் 3 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அவர் வந்தடைவார்.

2013ஆம் ஆண்டு மைஹிவன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிங் ஆஃப் கிங் எனும் மாபெரும் இளையராஜா இசை நிகழ்ச்சி, ஸ்டேடியம் மெர்டேகாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், உடல்நிலை குறைவு காரணமாக இளையராஜா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

அந்த நிகழ்ச்சியில் மீண்டும் இளையராஜாவை அழைத்து வருவேன் என மைஹிவன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஷாஹூல் அமிட் கூறியிருந்தார். அதேபோல் அக்டோபர் 7ஆம் தேதி இசைஞானி இளையராஜா தலைமையில் ‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கின்றது.

இதன் அதிகாரப்பூர்வ அறிமுகவிழா இவ்வாரம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பிரிக்பில்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் மலேசிய ரசிகர்களைச் சந்திக்க இசைஞானி இளையராஜா வருகை புரிகின்றார் என மைஹிவன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஷாஹூல் அமிட் உறுதி படுத்தினார்.

முன்னதாக மலேசிய உள்ளூர் கலைஞர்கள் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்விப்பார்கள். பின்னர் 8 மணிக்கு அதிகாரப்பூர்வ தொடக்கவிழாவில் இசைஞானி இளையராஜா பங்கேற்கிறார். அவருடன் பிரபல பின்னணி பாடகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி குறித்த முதல் போஸ்டர் அன்றைய நாள் வெளியிடப்படும். அதோடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் இதர பாடர்கள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படும். இதுவரையில் முன்னணி பாடகர்களான ஹரிஹரன், ஹரிசரன், மனோ, சித்ரா, ஸ்ரேயா கோஷேல் ஆகியோரும் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதையும் ஷாஹூல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவிற்கு வரும் இசைஞானியை வரவேற்க அவரது ரசிகர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வருகை புரியலாம் என்றார் அவர்.  முற்றிலும் வித்தியாசமான முறையில் இந்த ‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கின்றது. ராஜா என்றாலே பின்னணி இசைதான். இந்த நிகழ்ச்சியில் 15 நிமிடங்கள் இசைவிடாத பின்னணி இசையையும் அவர் வழங்கவிருக்கின்றார். இதுபோல் பல அற்புதமான விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் இடம்பெறுமென ஷாஹூல் நம்பிக்கை தெரிவித்தார்.

‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி இளையராஜா ரசிகர்கள் மட்டுமின்றி, இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சனிக்கிழமை பிரிக்பில்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் 3000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

spot_img

latest articles

explore more