சென்னை, ஆக.1 –
தல அஜித்குமார் நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விவேகம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திங்கட்கிழமை விவேகம் சென்சார் சான்றிதழைப் பெற்றது. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடத்தப்பட்டது.
விவேகம் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். எனினும் சென்சாருக்குப் பின்னர் படம் 24 ஆம் தேதி வெளியாகும் என சிவா அறிவித்துள்ளார்.
அஜித்துடன் காஜல் அகர்வால் ,விவேக் ஒபராய், அக்ஷ்ரா ஹசான் ,கருணாகரன் நடித்துள்ளனர்.


