Homeவிளையாட்டுபட்டத்தை தற்காப்பேன் - உசேன் போல்ட்

பட்டத்தை தற்காப்பேன் – உசேன் போல்ட்

லண்டன், ஆக.2 –
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள உலக திடல் தடப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக வெற்றியாளர் பட்டத்தை தற்காக்கப் போவதாக ஜமைக்காவின் உசேன் போல்ட் சூளூரைத்துள்ளார்.
உலக திடல் தடப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும்போது, உலகின் மிகச் சிறந்த ஓட்டக்காரர் என்ற பெருமையுடன்   விடைபெற தாம் இலக்கு கொண்டுள்ளதாக உசேன் போல்ட் தெரிவித்தார்.
அண்மையில் பிரான்சின் மொனாக்கோவில் நடைபெற்ற வைர லீக் போட்டியில் உசேன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 9.95 வினாடிகளில் முடித்தார். இந்த ஆண்டில் முதல் முறையாக 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தை உசேன் போல்ட் பதிவு செய்திருந்தார்.
மொனாக்கோவில் தமக்கு கிடைத்த வெற்றி தாம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதை உறுதிச் செய்வதாக உசேன் போல்ட் மேலும் தெரிவித்தார்.
“தனிநபர் போட்டிகளில் தோல்வியே காணமால் விடைபெற்றார் உசேன் போல்ட் ” என்ற தலைப்புச் செய்திதான் தமக்கு பொருந்தும் என உசேன் போல்ட் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.
100 மீட்டர் போட்டியில் எந்த போட்டியாளர் தமக்கு சவாலை வழங்கக்கூடும் என்பதை உசேன் போல்ட் குறிப்பிடவில்லை. ஆனால் தம்மோடு போட்டியிடும் ஏழு ஓட்டக்காரர்களும் இறுதி வரை தமக்கு சவால் வழங்கக்கூடும் என அவர் கூறினார்.
30 வயதுடைய உசேன் போல்ட் லண்டனில் நடைபெறும் உலக திடல் தடப் போட்டியோடு ஓய்வு பெற விருக்கிறார். 2008 ஆம் ஆண்டுத் தொடங்கி உலக திடல் தடப் போட்டிகளில் 100, 200 மீட்டர் பிரிவுகளில் அசைக்க முடியாத வீரராக உசேன் போல்ட் விளங்குகிறார்.
spot_img

latest articles

explore more