Homeமலேசியாஸாஹிட்டின் மீது போலீஸ் புகார்

ஸாஹிட்டின் மீது போலீஸ் புகார்

கோலாலம்பூர், ஆக. 2-

துன் டாக்டர் மகாதீரை சிறுமைப்படுத்தும் நோக்கில் அவரை இனவாதியாகப் பேசிய ஸாஹிட்டின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் செய்யப்பட்டது.  இந்த விவகாரத்தில் தகுந்த முகாந்திரம் இருக்குமானால் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி மற்றும் தேசிய பதிவிலாகாவின் தலைமை இயக்குநரின் டத்தோ யாஸிட் ரம்லி ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கிளானா ஜெயா அம்னோ பேராளர் கூட்டத்தில் உரையாற்றிய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, டாக்டர் மகாதீர் இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்தவரென்றும், அவரின் தகப்பானார் இந்தியா கேரளாவைச் சேர்ந்தவரென்றும் அவரின் உண்மையான பெயர் மகாதீர் த/பெ இஸ்கண்டார் குட்டி என்றும் மலாய்க்காரர் அல்லாத அவர் மலாய்க்காரர்களைப் பயன்படுத்தி அவர்களுக்காகப் போராடுவதாக நாடகமாடியிருப்பதாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

அந்தப் போலீஸ் புகாரை ஜசெகவின் சட்டப் பிரிவு முன்னெடுத்தது. அந்தப் புகாரை டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் செய்ய செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிம் எங், லாலாங் நாடாளுமன்ற உறுப்பினர் எலிஸ் லாவ் கியோங் யிங், ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் சு, பத்து காவான் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ கைருடின் அபு ஹசான் ஆகியோர் செய்தனர். தகவல் சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்ட ஸாஹிட் மற்றும் யாஸிட் ஆகியோர் மீது மகாதீர் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கைருடின் கேட்டுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more