Homeமலேசியாஅந்நியத் தொழிலாளர்களை நிர்வகிக்க சிறப்புக் குழு

அந்நியத் தொழிலாளர்களை நிர்வகிக்க சிறப்புக் குழு

ஈப்போ, செப் 30
அந்நியத் தொழிலாளர்களை நிர்வகித்து அவர்களின் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் சிறப்புக் குழு இம்மாதம் 2ஆம் வாரத்தில் தனது பணியைத் தொடங்கும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

இதற்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் யூனூஸ் மற்றும் முன்னாள் பொதுச்சேவை ஊழியர்கள் குழுப் பேச்சாளர், டத்தோ நோர் பரிடா அரிபின் ஆகியோர் தலைமையேற்பர் என்று அவர் குறிப்பிட்டார்.

அக்குழு அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு கருத்துகளைச் சேகரிக்கும். கருத்துகளைப் பெற்ற பின்னர் ஓர் இறுதியான முடிவெடுக்கும் வகையில் இப்பரிந்துரைகள் அனைத்தும் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இதனிடையே, இந்நாட்டில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க ஒரு சில நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவது குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈப்போ பாராட் தொகுதி எம்.பி.யுமான குலசேகரன் கூறினார்.

spot_img

latest articles

explore more