Homeமலேசியாரோன் 97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 சென் அதிகரிப்பு

ரோன் 97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 சென் அதிகரிப்பு

கோலாலம்பூர், அக். 1
பிரீமியம் ரோன் 97 பெட்ரோல் விலை 14 சென் அதிகரித்துள்ளது. அது இம்மாதம் 2 வெள்ளி 79 காசாக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரோன் 95 பெட்ரோல் விலை தற்போதை விலையான 2 வெள்ளி 20 காசாக நிலை நிறுத்தப்படுகிறது. டீசலின் விலையில் மாற்றமில்லாமல் 2 வெள்ளி 18 காசகவே விற்கப்படும்.

ரோன் 97இன் புதிய விலையை உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு தனது முகநூல் அகப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விலையானது இன்றிலிருந்து அமலுக்கு வருமென அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, ரோன் 95 மற்றும் டீசலின் விலையை நிலைநிறுத்த அரசு 300 கோடி வெள்ளியை ஒதுக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more