Homeவிளையாட்டுஜனவரி மாதம் பொக்பாவை வாங்க பார்சிலோனா திட்டம் !

ஜனவரி மாதம் பொக்பாவை வாங்க பார்சிலோனா திட்டம் !

பார்சிலோனா, அக்.2 –

வரும் ஜனவரி மாதம் மென்செஸ்டர் யுனைடெட் மத்திய திடல் ஆட்டக்காரர் போல் பொக்பாவை வாங்க பார்சிலோனா திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோவுடனான பொக்பாவின் உறவில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி  பொக்பாவை வாங்க பார்சிலோனா ஆலோசித்துள்ளது.

எனினும் பொக்பாவுடன் சேர்ந்த மேலும் மூன்று ஆட்டக்காரர்களைக் கொண்டு வரவும் அந்த அணி திட்டமிட்டு வருகிறது. பாரிஸ் செயின் ஜெர்மைன் அணியின் ஆட்ரியன் ரபியோட்,   ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாம்மின் பிரான்கி டி ஜாங்கையும் வாங்க பார்சிலோனா எண்ணம் கொண்டுள்ளது.

மென்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து பொக்பாவைக் கவர வேண்டும் என்றால் பார்சிலோனா 10 கோடி ஈரோ டாலரை செலவிட வேண்டும். எனினும் கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம், நெய்மாரை 22 கோடி ஈரோ டாலருக்கு விற்ற பார்சிலோனாவுக்கு பொக்பாவுக்காக 10 கோடி டாலரை செலவிட தயக்கம் காட்டது என கூறப்படுகிறது.

அதேவேளையில் பொக்பாவை வாங்குவதன் மூலம், வர்த்தக ரீதியாக மேலும் சில கோடிகளை சம்பாதிக்க பார்சிலோனா திட்டமிட்டுள்ளது. இருப்பினும் பொக்பாவை வாங்குவது தொடர்பில் பார்சிலோனா வாரியத்தில் இரண்டு வெவ்வேறு கருத்துகள் நிலவுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பார்சிலோனா அணியில் பொக்பா எவ்வாறு பொருந்துவார் என்பது குறித்தும் தீர ஆலோசிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனினும் பார்சிலோனா, அனைத்து நிலைகளிலும் வலுவான ஓர் அணியாக விளங்க பொக்பா போன்ற ஆட்டக்காரர் தேவை என்பதிலும் பார்சிலோனா விளையாட்டு இயக்குனர் எரிக் அபிடால் உறுதியாக உள்ளார்.

spot_img

latest articles

explore more