Homeவிளையாட்டுபெல்ஜியமுடன் சமநிலைக் கண்டது நெதர்லாந்து !

பெல்ஜியமுடன் சமநிலைக் கண்டது நெதர்லாந்து !

புரூசெல்ஸ், அக்.17 –

அனைத்துலக நட்புமுறை கால்பந்து ஆட்டத்தில் நெதர்லாந்து 1 –  1 என்ற கோலில் பெல்ஜியமுடன் சமநிலைக் கண்டது. ரோனால்ட் கூமன் பயிற்றுனர் பொறுப்பை ஏற்றது முதல், மெல்ல மெல்ல  மீட்சிப் பெற்று வரும் நெதர்லாந்து தனது அண்டை நாடான பெல்ஜியமுடன் சமநிலைக் கண்டிருப்பது சிறந்த முடிவாக கருதப்படுகிறது.

ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் டிரியஸ் மெர்ட்டேன்ஸ் போட்ட கோலின் மூலம் பெல்ஜிய 1 – 0 என்ற கோலில் முன்னணிக்கு சென்றது. இருப்பினும் 27 ஆவது நிமிடத்தில் குரோனேவெல்ட் போட்ட கோலின் வழி நெதர்லாந்து ஆட்டத்தை சமப்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான லீக் போட்டியில் நெதர்லாந்து 3 -0 என்ற கோல்களில் ஜெர்மனியை வீழ்த்தி அதிரடிப் படைத்தது. கடந்த 2016 ஐரோப்பிய கிண்ணம், 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளுக்குத் தகுதிப் பெறுவதில் தோல்வி கண்ட நெதர்லாந்து தற்போது மீண்டும் தனது பழைய அடைவுநிலைக்குத் திரும்பிக் கொண்டிருகிறது.

spot_img

latest articles

explore more