Homeஅரசியல்பதவி விலகவும் தயார் -துன் மகாதீர்

பதவி விலகவும் தயார் -துன் மகாதீர்

லங்காவி, அக். 21
இன்றே பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருக்கிறேன் என்று லங்காவியில் நேற்று நடந்த வாடகைக்கார் ஓட்டுநர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு எதிராக அரசாங்கம் மின்னியல் அழைப்புக் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதாக அக்கூட்டத்தில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நான் உங்களுக்கு உதவியதில்லை என்று நீங்கள் நினைத்தால், நினைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் என்ன நடக்கும் என்று உணர்ந்து கொள்வீர்கள். நீங்கள் எனக்கு உதவவில்லை என்றால் நானும் உங்களுக்கு உதவ முடியாது என மகாதீர் குறிப்பிட்டார்.

பிரதமராக வேண்டுமென நான் விரும்பி வரவில்லை. மக்கள் அழைத்ததால்தான் பதவிக்கே வந்தேன். நான் பிரதமராக இருப்பது உங்களுக்கு விருப்பமில்லை என்றால் இன்றே நான் பதவி விலகவும் தயாராக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தாம் அனைத்துத் தரப்பாருக்கும் சாதகமான தீர்வையும் பயனையும் அளிக்கவே பாடுபடுவதாக அவர் அறிவித்த பின்னர், சில தரப்பார் அதனை விரும்பாமல் தகாத வார்த்தைகளைக் கூறி கூட்டத்தின் அமைதியைக் கெடுத்ததோடு, கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்தனர்.

இரு நிமிடங்களுக்குப் பின்னர், அமைதி நிலவிய பின்னர், தாம் வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு உதவவே முயற்சி செய்வதாகவும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more