Homeமலேசியாம.இ.கா. தேர்தல் - துணைத் தலைவர் தேர்தலில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் வெற்றி...

ம.இ.கா. தேர்தல் – துணைத் தலைவர் தேர்தலில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் வெற்றி !

கோலாலம்பூர் , அக்.21 –

மலேசிய இந்தியர் காங்கிரஸ் ( ம.இ.கா) உயர் மட்ட பதவிகளுக்கான தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் வெற்றி பெற்றுள்ளார். துணைத் தலைவர் தேர்தலில் ,பிரபல தொழிலதிபர் டான் ஶ்ரீ எம். ராமசாமியை விட 3, 500 வாக்குகள் பெரும்பான்மைப் பெற்று சரவணன் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் துணைத் தலைவர் உட்பட இதர பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை ம.இ.கா. தலைமையகம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இன்று மாலைக்குள் அனைத்து பதவிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2009 ஆம்  ஆண்டில் கட்சியின் உதவித் தலைவர் தேர்தலில் வென்ற டத்தோ ஶ்ரீ எம். சரவணன், 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் தமது பதவியைத் தக்க வைத்து கொண்டார். ஆனால் 2015  ஆம் ஆண்டில் நடந்த கட்சியின் மறு தேர்தலில் சரவணன் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் டத்தோ ஶ்ரீ எஸ்.கே. தேவமணியிடம் தோல்வி கண்டார்.

இந்நிலையில் இளைஞர், விளையாட்டுத் துறையின் முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ சரவணன், ம.இ.கா-வில் இரண்டாவது உயரிய பதவியை அடைந்திருப்பது அவரின் அரசியல் பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனை என்றுதான் சொல்ல வேண்டும்.

spot_img

latest articles

explore more