Homeமலேசியாநாடு முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொள்ளும் அம்னோ தலைவர் !

நாடு முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொள்ளும் அம்னோ தலைவர் !

கோலாலம்பூர், அக்.26 –

14 ஆவது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தை அடுத்து நாடு முழுவதும் உள்ள அம்னோ உறுப்பினர்களை மீண்டும் போராட்ட களத்துக்கு கொண்டு வரும் நோக்கத்தில் அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை அஹ்மாட் சாஹிட் ஹமிடியும்., அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசானும் கோலத் திரெங்கானு சென்றடைந்தனர்.

நிதி முறைக்கேடு தொடர்பில் நீதிமன்றத்தில் 45 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தாலும்,  டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் அம்னோ உறுப்பினர்களை நேரில் சந்தித்து 15 ஆவது பொதுத் தேர்தலுக்கான கட்சியின் இலக்குக் குறித்து கலந்து பேசுவார் என அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார். திரெங்கானுவில் தொடங்கும் பயணம் கிளந்தானில் முடிவடையும் என அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது அனைத்து தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களை அஹ்மாட் சாஹிட் சந்திக்க விருக்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற அம்னோ பொது பேரவையில், 15 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதே அம்னோவின் இலக்கு என சாஹிட் தனது கொள்கை உரையில் கூறியிருந்தார். அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது நாடு முழுவதும் அம்னோ உறுப்பினர்களை சந்திக்கும் பணிகளை சாஹிட் முடுக்கி விட்டுள்ளதாக ஷம்சுல் தெரிவித்தார்.

 

spot_img

latest articles

explore more