Homeமலேசியாதிருந்தியவர்களை ஏற்றுக் கொள்ள பெர்சத்து தயாராக உள்ளது - முஹிடின் !

திருந்தியவர்களை ஏற்றுக் கொள்ள பெர்சத்து தயாராக உள்ளது – முஹிடின் !

கோலாலம்பூர், டிச.15-

ஒரு ஜனநாயக கட்சி என்ற முறையில், பிரிபூமி பெர்சத்து கட்சி எந்த ஓர் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறது.  கட்சியின் நிர்ணயித்திருக்கும் கொள்கை மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கும் பட்சத்தில் அவர்களைச் சேர்த்துக் கொள்வதில் தடையேதும் இல்லை என பெர்சத்து தலைவர் டான் ஶ்ரீ முஹிடின்  யாசின் தெரிவித்தார்.

முன்னாள் அரசாங்கத்தில்,  டத்தோ ஶ்ரீ நஜிப்பை ஆதரித்ததை நினைத்து மனம் வருந்தும் எதிர்கட்சித் தலைவர்களை அரவணைக்கவும் பெர்சத்து தயாராக உள்ளது.எனினும் அவர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ள முன்னர், முறையாக மதிப்பிடப்படுவார்கள் என முஹிடின் மேலும் தெரிவித்தார்.

அதேவேளையில் அவர்களுக்கு உடனடியாக பதவி வழங்க வேண்டும் என்ற கட்டாயம், பெர்சத்து கட்சிக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் ஊழல், அதிகாரமுறைக் கேட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும் முஹிடின் தனது பேஸ்புக்கில் சனிக்கிழமை குறிப்பிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more