Homeகலை உலகம்௭டிசன் விருது விழா: ஆஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி 4 விருதுகளை தட்டிச்...

௭டிசன் விருது விழா: ஆஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி 4 விருதுகளை தட்டிச் சென்றது

கோலாலம்பூர், பிப். 18-

சென்னையில் நேற்று நடைபெற்ற ௭டிசன் விருதளிப்பு விழாவில் 2018ஆம் ஆண்டுக்கான ஆஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்தது.

சிறந்த டீசர், சிறந்த கருப்பொருள், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்  மற்றும் சிறந்த பாடகர் ஆகியவையே 12 ஆவது ஆண்டாக நடைபெற்ற ௭டிசன் விருது விழாவில்  ஆஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் வென்ற விருதுகள் ஆகும்.

இந்தப் பட்டியலில் சிறந்த டீசருக்கான விருதை ஆஸ்ட்ரோ புத்தாக்க இயக்குநர் ராஜேந்திரன் ராஜமாணிக்கமும் சிறந்த கருப்பொருளுக்கான விருதை ஆஸ்ட்ரோ நிகழ்ச்சி தயாரிப்பாளர் குமரன் ஆறுமுகமும் வென்றனர்.

சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் விருதுகளுக்கு முறையே இசை வேந்தன் ஜெய்யும் அருள்செல்வன் செல்வசாமியும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2018 ஆம் ஆண்டின்  சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின்  சிறந்த பாடகருக்கான விருது அன்பழகன் அன்பரசனுக்குக் கிட்டியது.

spot_img

latest articles

explore more