கோலாலம்பூர், ஆக.24 –
2017 சீ விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான மும்முறை குதித்து நீளம் தாண்டுதல் போட்டியில் தேசிய திடல் தட வீரர் ஹக்கிமி இஸ்மாயில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இம்முறை நடைபெறும் சீ போட்டியில் மலேசியா பெற்றிருக்கும் ஐந்தாவது தங்கப் பதக்கமாகும்.
மும்முறை குதித்து நீளம் தாண்டுதல் போட்டியில் 16.77 வினாடிகளைப் பதிவு செய்த ஹக்கிமி சீ விளையாட்டுப் போட்டியின் சாதனையையும் தம்முடைய தேசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் ஹக்கிமி 16.76 வினாடிகளைப் பதிவு செய்திருந்தார். தற்போது அந்த சாதனையை ஹக்கிமி மீண்டும் முறியடித்துள்ளார்.
பிலிப்பைன்சின் மார்க் ஹாரி டியோனேஸ் , 16.63 மீட்டரை பதிவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தாய்லாந்தின் பிராட்சாயா தெப்பாராக் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.


