Homeவர்த்தகம்மின்தூக்கியில் சிக்கிய 2 பெண்கள் மயங்கி விழுந்தனர்!

மின்தூக்கியில் சிக்கிய 2 பெண்கள் மயங்கி விழுந்தனர்!

ஷா ஆலம், ஆக.24-
கிள்ளான், ஜாலான் முஹிபாவிலுள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள மின்தூக்கியில் இன்று அதிகாலை 6.32 மணி அளவில் சிக்கி கொண்ட 2 பெண்கள் மயங்கி விழுந்தனர்.

அவர்கள் இருவரும் சுமார் அரை மணி நேரம் மின்தூக்கியினுள் சிக்கிக் கொண்டதாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நடவடிக்கை நிர்வாக பிரிவு தலைவர் அலுமாடா புக்ரி தெரிவித்தார். அவ்விருவருடன் மேலும் 10 பேர் அந்த மின்தூக்கியினுள் சிக்கியிருந்ததாக அவர் கூறினார்.

அவர்களில் 2 பேர் மூச்சுத் திணறல் காரணத்தினல் மயக்கமுற்றனர். இருப்பினும், மீட்பு நடவடிக்கையின் போது இவர்களில் ஒருவருக்கு சுயநினைவு திரும்பி விட்டதாக செய்தியாளர்களிடம் அலுமாடா புக்ரி குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more