Homeமலேசியாதேசிய தின கொண்டாட்டத்திற்காக தலைநகரில் 21 சாலைகள் மூடப்படும்!

தேசிய தின கொண்டாட்டத்திற்காக தலைநகரில் 21 சாலைகள் மூடப்படும்!

கோலாலம்பூர், ஆக.25-
60ஆவது தேசிய தினக் கொண்டாட்டம், சீ விளையாட்டு போட்டியின் நிறைவு விழா ஆகியவற்றை முன்னிட்டு தலைநகரில் 21 சாலைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

டத்தாரான் மெர்டேக்காவை சுற்றியுள்ள 19 சாலைகள் நாளை ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை காலை மணி 6.00 முதல் பகல் மணி 1.00 வரை தேசிய தின கொண்டாட்ட அணிவகுப்பின் ஒத்திகை, தேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மூடப்படும்.

சீ போட்டி நிறைவு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 6.00 மணியிலிருந்து விழா முடியும் வரையில் புக்கிட் ஜாலிலில் ஜாலான் மேரா சாகார், ஜாலான் புத்ரா சாலைகள் ஆகியவை மூடப்படும். ஜாலான் டிராவர்ஸ்/ஜாலான் டாமான்சாரா, லெபோராயா சுல்தான் இஸ்கண்டார், ஜாலான் லெம்பா, ஜாலான் பெர்டானா, ஜாலான் கினாபாலு, ஜாலான் ஹிஷாமுடின், ஜாலான் சென்டெராசாரி, லெபோ பாசார் பெசார், லெபோ அம்பாங், ஜாலான் துன் பேராக், ஜான் டாங் வாங்கி, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் கூச்சிங், டத்தோ ஓன் சாலை வட்டம், ஜாலான் ராஜா, ஜாலான் பார்லிமென், ஜாலான் முன்ஷி அப்துல்லா, ஜாலான் ஹாங் கஸ்தூரி முதலான சாலைகள் மூடப்படுகிறது.

மேற்கண்ட நாட்களில் தலைநகர் கோலாலம்பூர் மைய பகுதிக்கு செல்கின்றவர்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அமர் சிங் இஷார் சிங் தெரிவித்தார். பங்சாரிலிருந்து வருகின்றவர்கள் ஜாலான் பார்லிமென், ஜாலான் கூச்சிங்கைப் பயன்படுத்தலாம். காஜாங்கிலிருந்து வருகின்றவர்கள் ஜாலான் ஹாங் துவா, ஜாலான் கினாபாலு, ஜாலான் கூச்சிங்கைப் பயன்படுத்தலாம்.

spot_img

latest articles

explore more