Homeமலேசியாசெப்டம்பர் 5ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார்

செப்டம்பர் 5ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார்

சிரம்பான், ஆக.25-
அடுத்த மாதம் 5ஆம் தேதி தாம் பணியிலிருந்து ஓய்வு பெறவிருப்பதை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் உறுதிபடுத்தினார்.

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார். பொதுச்சேவை ஊழியர்கள் அனைவரும் தங்களின் 60 வயதை நெருங்கும் போது கட்டாயப் பணி ஓய்வுக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதனால் 60 வயதை அடைந்து விட்ட பொதுச்சேவை ஊழியர்கள் அனைவரும் பணியிலிருந்து ஓய்வு பெற வலியுறுத்தபடுவதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைமையகத்திற்கு வருகை புரிந்த அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.

என் பணி ஓய்வுக்காக நான் காத்திருந்தேன். இப்போது பணி ஓய்வு பெறவிருக்கும் நேரத்தில் நான் எதனையும் கூற விரும்பவில்லை என காலிட் கூறினார். கடந்த 1976 டிசம்பர் 5ஆம் தேதி கோலாலம்பூர் போலீஸ் பயிற்சிக் கல்லூரியிலிருந்து ஓர் இன்ஸ்பெக்டரான காலிட், கடந்த 2013ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி தேசிய போலீஸ் படைத் தலைவராக பொறுப்பேற்றார்.

spot_img

latest articles

explore more