Homeஇந்தியா/ ஈழம்சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

சென்னை, திசம்பர் 8:-

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய சித்ரா, பல்வேறு தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் நாயகியாக நடித்துள்ளார். அண்மையில் இவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் உயர்தர தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு சவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கானக் காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரின் இரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வேளையில் அநேகன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றது.

spot_img

latest articles

explore more