ஜோகூர் பாரு, திசம்பர் 8:-
சிங்கப்பூரில் வேலை இழந்த மலேசியர்களுக்காகப் பிரத்தியேகமாக “பெஞ்சானா கெர்ஜாயா” வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு, ஜொகூர் மாநிலத்தில் உள்ள நிறுவனங்களின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 14 முதல் 16 வரை, காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த நேர்முகத்தேர்வு இயங்கலை வழி நடைபெறும்.
30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 1500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் ஜோகூர் வட்டாரத்தில் காத்திருக்கின்றன. இந்த வாய்ப்பை கோவிட்-19 தாக்கத்தால் வேலை இழந்து, வருமானத்தை இழந்துத் தவிக்கும் பலரும், புதிதாக வேலை தேடும் பட்டதாரிகளும் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அலுவலகப் பணியாளர் முதல் தலைமைத்துவப் பொறுப்பு வரை பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. அலுவலக உதவியாளர், தொழிற்சாலை பணியாளர், கணக்காய்வாளர், பொறியியலாளர், மேற்பார்வையாளர், தலைமை நிர்வாகி, ஓட்டுநர், மனிதவளத்துறை, விற்பனை, தொடர்புத்துறை எனப் பலதரப்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. அவரவர் கல்வி, அனுபவத்திற்கு ஏற்ப வேலைகளைத் தேர்ந்தெடுத்து முயற்சி செய்யலாம்.
இந்த நேர்முகத் தேர்வில் பங்குகொள்ள முதலில் என்ற முகவரியில் இணையம் வழி பதிந்து கொள்ள வேண்டும். பின் CISCO WEBEX பதிவிறக்கம் செய்து அதன் வழி நேர்முகத்தேர்வில் பங்குகொள்ள வேண்டும்.
மேல்விவரங்களுக்கு திருமதி. நோராஷா 01128676032, திரு.பாஃடில் 0149423830, திரு.ஏய்சாஃடின் 0192537688 என்ற ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.
பெர்கேசோவின் “மைபியுச்சர்ஜோப்ஸ்” , ஜோகூர் மாநில ம.இ.காவின் ஒத்துழைப்போடு தேவை அறிந்து, காலம் அறிந்து இந்த வாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.


