ஈப்போ, திசம்பர் 8:-

புதிய ஆட்சிக்குழுவை நியமித்த பின்னர் சட்டமன்ற விவாதக் கூட்டம் தொடரும் என்பதால் அடுத்த புதன் கிழமைக்கு அஃது ஒத்திவைக்கப்பட்டதாக அதன் அவைத் தலைவர் டத்தோ முகம்மாட் ஸாஹிர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

அதன் படி அடுத்தக் கூட்டம் எதிர்வரும் திசம்பர் 16ஆம் நாள் பிர்பகல் 2.30க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டம் பத்து நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.

முந்தைய அட்டவணையின்படி, பேரா சட்டமன்றக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து நாட்களுக்குக் கூடியிருக்க வேண்டும். ஆனால், எதிர்ப்பாராத வகையில் அன்று ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் தொடர வேண்டியக் கூட்டம் இன்றையத் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பேரா மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டு அது தொட்ர்பான விவாதங்கள் தொடரப்பட்டிருக்கப்பட வேண்டும். ஆனால், அம்மாநில முதல்வர் மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்தை அவைத் தலைவர் முதலில் விவாதிக்க முடிவு செய்ததால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

புதிய முதல்வர் நியமிக்கப்பட்டதும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் 14 நாட்கள் கடிதம் கொடுக்கப்பட வேண்டும். அக்கடிதத்தில் சட்டமன்றக் கூட்டம் தொடரப்படுவது குறித்து குறிப்பிடப்பட வேண்டும் என ஸாஹிர் மேலும் குறிப்பிட்டார்.