கோலாலம்பூர், திசம்பர் 8:-
பேரா மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தது முதல் அடுத்த ஆட்சிக்கான குழப்பங்களும் பல சந்திப்புகளும் நிகழ்ந்தன. இன்று அம்னோ, பாஸ், பெர்சத்து கட்சிகளின் உயரியத் தலைவர்கள் சந்திப்பு நடத்தி அந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த அந்தச் சந்திப்பின் முடிவாக பேரா மாநிலத்தில் தேசியக் கூட்டணி ஆட்சி அமைக்கும் எனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் நலனை முன்னிறுத்தி இந்த உடன்பாடு முடிவு செய்யப்பட்டதாக பாஸ் கட்சியின் கௌரவச் செயலாளர் டத்தோ தக்கியூடின் ஹசான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அது தொடர்பான சந்திப்பில் பெர்சத்துவின் நிகராளியாக பிரதமர் தான் ஶ்ரீ முகிதீன் யாசின், அம்னோவின் நிகராளியாக டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி, பாஸ் கட்சியின் நிகராளியாக டத்தோ ஶ்ரீ அப்து ஹாடி அவாங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தக்கியூடினைத் தவிர்த்து பெர்சத்துவின் கௌரவச் செயலாளர் ட்த்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் ஒற்றுமைக் கூட்டணியின் (MUAFAKAT NASIONAL) செயலாளர் தான் ஶ்ரீ அன்னுவார் மூசா ஆகியோரும் உடனிருந்தனர்.


