Homeஅரசியல்பேராவின் அடுத்த முதல்வராக டத்தோ சராணி : தேசியக் கூட்டணி பரிந்துரை

பேராவின் அடுத்த முதல்வராக டத்தோ சராணி : தேசியக் கூட்டணி பரிந்துரை

கோலாலம்பூர், திசம்பர் 8:-

அம்னோ, பெர்சத்து, பாஸ் கட்சிகளின் ஒருமித்த முடிவாக டத்தோ சராணி முகம்மட் பேரா மாநில முதல்வராகப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தேசிய முன்னணியின் கௌரவச் செயலாளர் அன்னுவார் மூசா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பேரா மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தது முதல் அடுத்த ஆட்சிக்கான குழப்பங்களும் பல சந்திப்புகளும் நிகழ்ந்தன. இன்று தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளான அம்னோ, பாஸ், பெர்சத்து கட்சிகளின் உயரியத் தலைவர்கள் சந்திப்பு நடத்தி அந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

அச்சந்திப்பில் பேரா மாநில முதல்வராக டத்தோ சராணி முகம்மட்டின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more