புக்கிட் ஜாலில் | பிப்பரவரி 25:-
‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ போட்டியைப் பற்றினச் சில விபரங்கள்
• தங்களின் கட்டணங்களைச் செலுத்துவதற்கான ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெற ரசிகர்கள் ‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ போட்டியில் 2021 மார்ச் 1 முதல் 12 வரைப் பங்கேற்க்களாம்.
• போட்டியாளர்கள் தங்களின் கட்டண அறிக்கையையும் ராகா அக்கட்டணத்தை செலுத்த வேண்டியக் காரணத்தையும் எழுதி ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
• தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு போட்டியாளர்களின் விபரங்கள், ஒவ்வொரு நாளும் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை மணி 6 முதல் நள்ளிரவு மணி 12 வரை வானொலியில் அறிவிக்கப்படும். மேலும், அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், சம்பந்தப்பட்டப் போட்டியாளர்கள், 03 95430993 தொலைபேசி எண்களின் வழியாக 15 நிமிடங்களில் அழைக்க வேண்டும்.
• வெற்றியாளர்கள் தங்களின் கட்டணத்தைச் செலுத்த ரிம200 ரொக்கப் பரிசை வெல்வர். சிறப்புச் சுற்றின் போது ரிம300 ரொக்கப் பரிசை வெல்வர்.
• ‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ போட்டியின் நிதி வழங்குநர், கீத்தி ஹெர்பல்ஸ் (Kytee Herbals).
• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.


