பண்டார் பாரு பாங்கி | மார்ச் 1
அண்மையில் 4 வயது சிறுவன் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அச்சிறுவனின் தாயார் புவனேஸ்வரியும் அவரது காதலன் தனபாலனும் இன்று கொலைக் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டனர்.
இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி எஃபென்டி நஷிலா அப்துல்லா முன்னிலையில் அவ்விருவருக்கும் எதிரானக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
31 வயது மிக்க புவனேஸ்வரியும் 28 வயது மிக்க தனபாலனும் அக்குற்றத்தைச் செய்ததாக தலையசைத்து ஒப்புக் கொண்டனர்.
குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் அந்த இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.
மேலும், அவ்விருவருக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. தடயவியல், வேதியியல், உடற்கூறாய்வுப் பரிசோதனை அறிக்கைக்காக அவர்கள் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


