Homeமலேசியாஅரசு ஊழியர்களுக்கு அரை மாத ஊதியம் சிறப்பு நிதி உதவியாக வழங்கப்படும் ! – சிலாங்கூர்...

அரசு ஊழியர்களுக்கு அரை மாத ஊதியம் சிறப்பு நிதி உதவியாக வழங்கப்படும் ! – சிலாங்கூர் மாநில அரசு

ஷா ஆலாம் | ஏப்ரல் 23:-

சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு அரை மாத சம்பளம் அல்லது குறைந்தது ரி.ம. 1,000 சிறப்பு உதவி நிதியாக வழங்கப்படும்.

இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் அமிருடின் ஷாரி தனது முகநூல் வாயிலாகத் தெரிவித்தார்.

இந்த சிறப்பு உதவி நிதியானது சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களின் அற்பணிப்பையும் கடமை உணர்ச்சியையும் மதிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பாக நாடு பல்வேறு சவால்களைச் சந்திக்கும்போது அரசு ஊழியர்களின் சேவை அளப்பரியது என அமிருடின் ஷாரி கூறினார்.

மேலும், சிலாங்கூர் மாநிலத்தில் மத்திய அரசின் கீழ் பணிபுரிபவர்களுக்கும் இந்த சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

இந்த சிறப்பு நிதி உதவிக்காக ரி.ம. 22.675 ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 19 ஆம் நாள் வழங்கப்பட உள்ளது.

spot_img

latest articles

explore more