ஜோர்ஜவுன் | ஏப்ரல் 23:-
பினாங்கு மாநிலத்தை ஒரு விவேகமான – பசுமையான மாநிலமாக மாற்றும் நோக்கில் 2030க்குள் 500,000 மரங்களை நட பினாங்கு மாநில அரசு இலக்கு வைத்துள்ளது என மாநில ஊராட்சி, வீடமைப்பு, நகர்ப்புற, கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் தியோ தெரிவித்தார்.
இவ்வேளையில் அனைத்துக நீடிக்க செபராங் பிறை மக்களும் ஒன்றிணைந்து தங்கள் வீட்டு வளாகங்களில் செடிகளை நடுவதோடு நம் பூமியை தொடர்ந்து சுகாதாரம் நிறைந்த இடமாக நீடிக்க வைத்திட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் பினாங்கு மாநகர கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர கழகம் (எம்.பி.எஸ்.பி), 2023-ஆம் ஆண்டிற்குள் 100,000 மரங்களை பினாங்கு மாநிலம் முழுவதிலும் நட உறுதி பூண்டுள்ளன.
நமது பூமியை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றிட பொதுமக்கள் தங்கள் வீட்டு வளாகங்களில் மரங்களை நடவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


