Homeமலேசியாகோவிட்-19 : சிரம்பான் 2 இடைநிலைப்பள்ளியில் 17 பேருக்குத் தொற்று ! ஒரு வாரம் மூடப்பட்டது...

கோவிட்-19 : சிரம்பான் 2 இடைநிலைப்பள்ளியில் 17 பேருக்குத் தொற்று ! ஒரு வாரம் மூடப்பட்டது !

சிரம்பான் | ஏப்ரல் 23:-

சிரம்பான் 2 இடைநிலைப்பள்ளியில் 17 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டுள்ளதால் இன்று தொடங்கி ஏப்ரல் 29 வரையில் 1 வாரத்திற்கு மூடப்படுகிறது.

நெகிரி செம்பிலான் மாநில முதலீடு, தொழ்ல்துறை, தொழில்முனைவர், கல்வி, மனித மூலதன ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகம்மட் ரஃபி அல்துல் மாலிக் இது குறித்து தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் 20ஆம் நாள் சுகாதார அமைச்சு நடத்திய கோவிட்-19 பரிசோதனையின்வழி இது கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அம்மாவட்டக் கல்வி அலுவலகம் சம்பந்தப்பட்டப் பள்ளிக்கூடத்தை மூட வேண்டும் என சுகாதார அலுவலகம் கேட்டுக் கொண்டது.

மேலும், கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட Sekolah Menengah Agama Persekutuan Labu பள்ளியைச் சேர்ந்த 179 பேர் நீலாய் அமினுடின் பாக்கி நிலையத்திலும் உயர்க்கல்வி தலைமைத்துவ பயிற்சி மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இருப்பினும், தற்பொழுது நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் சம்பந்தப்பட்ட அந்த சமயப் பள்ளி மூடப்படவில்லை என அவர் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more