கோலாலம்பூர் | ஏப்ரல் 23:-
நாளை முதல் நாடு முழுவதும் இரமலான் சந்தை அதிகாலை 2.00 மணி வரை இயங்கலாம்.
இரமலான் சந்தை வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இரமலான் சந்தை நள்ளிரவு 12.00 மணி வரை அனுமதிக்கப்பட்டால், இஷாக் தொழுகை முடிந்து இரமலான் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களின் அடிப்பையில், இரமலான் சந்தை வணிகர்களின் வியாபார நேரம் மிகக் குறைவாக இருக்கும். எனவே, இந்த நேர நீட்டிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் இன்று குறிப்பிட்டார்.


