Homeசமூகம்இணையதளம் வழி வெ. 80 கோடி மோசடி! துணையமைச்சர் தியோ நீ சிங் தகவல்

இணையதளம் வழி வெ. 80 கோடி மோசடி! துணையமைச்சர் தியோ நீ சிங் தகவல்

புத்ரா ஜெயா, மே 17-இணைய தளத்தைப் பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து போலியான முதலீட்டுத் திட்டங்களின் வழி இதுவரை 80 கோடி வெள்ளி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

பொதுமக்கள் இம்மாதிரியான போலி முதலீட்டில் பணத்தை இழந்து பரிதவிப்பதைத் தடுக்க அரசு பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான இணைய தள பயன்பாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாக அவர் சொன்னார்.

இணையதள பகடிவதை, சொந்த விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் பணத்தை இழக்காமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றிற்கு எதிராக தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

spot_img

latest articles

explore more